திருப்பூரில் துறைமுகம் கட்டுவோம் என ஸ்டாலின் சொன்னாரா?

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சமூக வலைத்தளங்களில் செய்தியை டைட்டில் கார்டு அமைத்து BIG NEWS மற்றும் BREAKING NEWS என அதில் செய்தியின் தலைப்பை வெளிடுயிடும்.

நியூஸ்7 தமிழின் இந்த டைட்டில் கார்டு-ஐ காமெடி மீம்ஸ்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் சிலர் இந்த டைட்டில் கார்டு-ஐ வைத்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வந்தது போல் போலியாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர். மேலும் அது உனண்மையிலேயே நியூஸ்7 தமிழ் தான் பதிவிட்டது என்று நினைத்தும் ஷேர் செய்து வருகின்றனர்.

அதை போல தமிழக பாஜக கட்சியும் செய்துள்ளது. நேற்று இரவு தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நியூஸ்7 தமிழின் இந்த டைட்டில் கார்டில் உண்மைகவே அத்தொலைக்காட்சி பதிவிட்டது என்று பறப்புவதற்காக தமிழக பாஜக கட்சியினர் போலியாக எடிட் செய்து அவர்களின் அந்த அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதை கண்ட நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி, தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதியப்பட்ட அந்த போலியான டைட்டில் கார்டு-ஐ பதிவிற்றக்கம் செய்து, அதை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் இதை போன்ற டைட்டில் கார்டு-ஐ நாங்கள் வெளியிடுவதில்லை. இது முற்றிலும் போலியானது என்றும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget