இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடப்பது போல இனி 5ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்ததது. அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளி வந்துக்கொண்டிருந்தன. அதையடுத்து 11 ஆம் வகுப்புக்கும் தற்போது பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை நடைமுறையில் நடைபெற்றுவருவதால், கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது. 


ஆகையால்  5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து  அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

இதனால் சிறு வயது மாணவர்களுக்கு பொதுதேர்வு பற்றிய அச்சம் மிக அதிகமாக ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget