போலியோ சொட்டு மருந்துக்கு நிதியில்லை... பசு பாதுகாப்புக்கு ரூ.750 கோடி நிதி

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். பதினாறாவது மக்களவையின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 

இதில் ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு ரூ.750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ் பசுப்பாதுகாப்பு, கால்நடைகள் பாதுகாப்பு, வளர்ப்புக்கு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியின் பெரும் பங்கு பசு பாதுகாப்புக்காக தான் பயன்படுத்தப்படும்.

இதே வேலையில் நாம் வேறு ஒன்றை இத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்...

தமிழகத்தில் அரும் பிப்ரவரி 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அது மார்ச் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆம், தமிழகத்துக்கு சொட்டு மருந்தை மத்திய சுகாதாரத்துறை ஆண்டு தோறும் விநியோகம் செய்து வரும் இந்த முறை போலியோ சொட்டு மருந்து அனுப்பவில்லை. ஆம், மருந்துகள் விலை ஏற்றம் காரணமாகவும், நிதி பற்றாக்குறை காரணமாகவும், மத்திய அரசு சொட்டு மருந்துகளை கொள்முதல் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. குழந்தைகள் நலனை மறந்துவிட்டு பசுக்களின் நலனில் அக்கரை செலுத்தும் மத்திய அரசை என்னெவென்று சொல்வது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget