புஷ்வானமான பட்ஜெட் - டெல்லியில் ஒரு லட்சம் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 2வது நாளாக நடத்தி வரும் போராட்டத்தால் அம்மாநிலம் முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது.

டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு விமான சேவை தொடங்குவதற்காக புதிய விமான வழித்தடம் அமைக்கப்பட்ட ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களை கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படாததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். டில்லி நொய்டா நேரடி விமான சேவை நடைபெறும் விமான வழித்தடத்தில் தொடங்கிய இந்த போராட்டம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது. 2வது நாளான இன்று சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget