11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தமிழக அரசு புதிய நெருக்கடி


தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட  வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அந்த வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், திமுக வழக்கறிஞர்கள் உச்சநீதிமறத்தில் இது குறித்து முறையிட்டனர்.

வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் வரும் 7ம் தேதி யாவது விசாரணைக்கு எடுத்துக் கொல்ல் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் திமுகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. 

இதன் காரணமாக வரும் பிப்ரவரி 7ம் தேதி ஓ.பி.எஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  வழக்கால் ஓ பி எஸ் உள்ளிட்ட 11 
எம் எல் ஏ க்கள் பதவி பறிபோகவும்,எடப்பாடி ஆட்சி பெரும்பான்மை இழந்து ஆட்சி கலையவும் வாய்ப்புள்ளது

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget