நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்தனரா?

நீட் தேர்வை தமிழக அரசியல் கட்சியினர் எதிர்த்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து பதிவிட்டு வரும் பாஜகவினர் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நீட் தேர்வு மாணவர்களுக்கு நண்மையே அளிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியின் நிலை:

இதன் உண்மை தன்மை குறித்து நமது நியூசு குழு ஆராய தொடங்கியது. அப்போது இது கலப்படமான மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பது தெரியவந்தது.

உண்மை செய்தி:

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் M.D., M.S., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பில் உள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கடந்த ஜனவரி 6-ம் தேதி தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட 148 நகரங்களில் நடைபெற்ற தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதிய நிலையில், 
தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்பட்டது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வில், நாடு முழுவதும் 79,633 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 11,121 பேர் தேர்வாகியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்து தான் 17,067 பேர் தேர்வை எழுதியிருந்தார்கள்./கர்நாடகாவில் 9219 பேரும்,மகாராஷ்டிராவில் 7441 பேரும், ஆந்திராவில் 6323 பேரும் இத்தேர்வை எழுதியிருந்தனர்.

நியூசு விளக்கம்:
இது உண்மையாக பாரட்டபட வேண்டிய செய்தி என்றாலும் அதை பாஜகவினர் சமூக வலைதளங்களில் திரித்து வெளியிடுகின்றனர். தமிழக மாணவர்கள் வெற்றி பெற்ற இந்த நீட் தேர்வானது M.D.,M.S., போன்ற மருத்து மேல் படிப்புகளுக்கானது. இந்த தேர்வை எழுதியவர்கள் M.B.B.S படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள். அதுவும் தமிழக மாநில பாடத்திட்டத்தின் படி படித்து நீட் தேர்வு எழுதாமல் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங்கில் தேர்வாகி MBBS படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு எழுதாதவர்கள் தகுதியற்ற மருத்துவர்கள் என விமர்சிக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வு எழுதாமல் MBBS படிப்பை முடித்து உயர்கல்விக்கான நீட் தேர்வில் பிற மாநிலத்தவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலமே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நீட் தேர்வு எழுதாமலேயே நமது தமிழக மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக வருகிறார்கள் என்பதை. 

இங்கு தமிழக மக்கள் எதிர்ப்பது உயர்கல்விக்கான நீட் தேர்வை அல்ல. 12ம் வகுப்பை படித்துவிட்டு MBBS படிக்க செல்லும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நீட் தேர்வை தான். காரணம், மருத்துவக்கனவுடன் 12ம் வகுப்பை அரசுப்பள்ளிகளில் படித்துவிட்டு செல்லும் அனிதா போன்ற ஏழை மாணவ மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்.

இதிலும் நாம் கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில், பொதுப்பிரிவு மாணவர்கள், OBC பிரிவு மாணவர்களில் தேர்ச்சியடைந்தவர் விட தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. அதுவே SC,ST பிரிவுகளில் தேர்ச்சியடைந்தவர்களை காட்டிலும் தோல்வியடைந்தவர்கள் அதிகம். மத்திய அரசு தேர்வுகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் புறம் தள்ளப்படுகிறார்கள் என குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த தேர்வு முடிவுகளும் அதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget